Search Keyword in PHYSIOLOGY category
- a. அபானவாயு - தசவாயுக்களி வொன்றாகிய கீழ் நோக்கிச் செல்லும் வாயு, இது மலக்குலையே யிடமாகக் கொண்டு, உச்சத் தலத்தில் நின்று, இடுப்பின் பூட்டு, மர்மஸ்தானம், அடிவயிறு, அடித்தொடை ஆகிய இவ்விடங்களிறல் பரவி, விந்து, நாதம், மலம், மூத்திரம், கருப்பம் ஆகிய இவைகளை வெளிப்படுத்தும். இது விகாரப்படின், கடுமையான மூத்திர நோய்களையும், குடல்நோய்களையும் உண்டாக்கும், இவ்வாயு, வியானன் என்னும் வாயுவோடு கலக்கப் பிரமேகம் முதலிய விந்துவைப் பற்றிய ரோகங்களு மேற்படும்.
b. One of the ten vital airs, having a tendency to pass downwards. It emanates from the region of the pelvic plexus and extends over the genitals, abdomen, pelvic region etc – ventris crepitus. It from the active agent in the discharge of semen, menstrual blood, fecal matter, and urine and also in expelling the contents of the womb. It is identical with the force of the Hypogastric plexus. An enraged condition of this Vayu tends to bring on serious that are peculiar to the urinary and the distal portion of the large intestines. Combining with Vyana, it may produce urinary disorders and disorders of the seminal fluid (Prahmeha).