Search Keyword in SPIRIUTUAL AND YOGA category
- a. இவ்வுடலின் சம்பந்தமாகச் செய்யும் பழக்க வழக்கங்களின் அபிவிருத்தி. சாதாரணமாக உடம்பில் வலிவு ஏறும்படிக்கும், கிழத்தனத்தைத் தடுப்பதற்கும், இவ்வப்பியாசத்தைப் பழகுவதுண்டு. ஆகவே, யாரொருவர், ஆத்ம லாபத்தை அடைய வேண்டியத் தன்னுடைய உடம்பைச் சுத்தப்படுத்திப் பூரிக்கச் செய்து பலம் உண்டாக்கிச் சௌக்கிய நிலைமையில் வைத்திருக்க விரும்புகிறாரோ அவர்தான் இவ்வழியை அனுசரிக்க அருகரானவர்.
சாதாரணமாகத் தன்னுள் வாய்ந்த சக்திக்கும், அகண்ட சக்திக்கும் உள்ள, பிராண வாயுவின் வேறுபாட்டினால் ஒரு நிலைப்பட இயலாத தன்மை, இவ்வப்பியாசத்தினால் மாறுபட்டுச் சமநிலை ஒருமை ஏற்பட்டு உடம்பில் அதிகமாக ஆத்மசக்தி சேருவதற்கு இடம் உண்டாகும்.
முக்கியமா ஐம்புலனை வெல்லுவதற்கு ஆத்ம விசாரணை வேண்டும் மனிதருக்குள் இயல்பாக அமைந்துள்ள சக்தி, உலக சம்பந்தமான விஷயங்கள் நடைபெறுதற்கு வேண்டிய அளவாக அமையப் பெற்றுள்ளதால், மேம்பட்ட ஆத்ம லாபத்தைப் பெறுவதற்குப் போதாது.
ஆதலால் அதற்கு வேண்டிய பிராண சக்தியைப் பிறிதொரு வழியால் அடைய வேண்டும். ஆகவே மேற்கண்ட சக்தியில்லாதவர்கள் இம்மார்க்கத்தை அனுசரிக்க வேண்டும். அப்படி அனுசரிப்பது தான் அடயோகம் என்று சொல்லப்படும்.
b. Hatha yoga is a more material form of development intended to obtain robust health and to defy old age.
It is an art to open the valve that separates for the time being the individual and universal life forces of Prana and to establish an equilibrium by which the physical body will be able to sustain the flow or in-rush of an increasing vital force.
The high intellectual penetration pre-supposes a conquest over the solicitations of the sense and the nervous system. Ordinarily, the equilibrium established is only sufficient for the normal vocations of life, but not for the higher form of intellectual and spiritual training.
Hence one who has in view the realisation of self, seeks to get at one command a large amount of vital force. For this purpose, a course of physical training is considered necessary, and this system of training is called ‘Hatha Yoga’.
NOTE: The chief processes of this kind of Yoga are, Asanas and Pranayama (scientific breathing) By these methods the will-power is enormously developed and the man is taught to be the master of his lower nature.