Search Keyword in TREE category
அத்தி மரம்
[ Aththimaram]
- a. அத்தி- நாட்டு அத்திமரம். இது ஒரு பெரிய மரம். 30-40 அடி உயரமுள்ளது. அடிமரம் சிறுத்தும், பட்டை ஓர் விதச் சிகப்பும் பச்சையும் கலந்த நிறமாகவும், இலை மாறி மாறியும், நுனியிற் கூராகவும், காயின் தோல் மிருதுவாயும், பழுத்தவுடன் மஞ்சள் நிறம் வாய்ந்ததாகவுமிருக்கும், பூக்கள் மற்றப் பூக்களைப் போல் வெளிவராமல் காய்க்குள்ளாகவே மறைந்திருக்கும். ஆகவே காண முடியாது. இக் காரணம் பற்றியே உலக வழக்கில் ‘காண்பதரிது’ என்று சொல்லுதற்குப் பதிலாக ‘அத்தி பூத்ததுபோல்’ என அவ்வர்த்தம் கொண்ட பழமொழியைக் கூறுவதுண்டு. இதன் அடி மரத்திலிருந்து பாலும், வேரினின்று ரசம் அல்லது பதினியும் எடுப்பதுண்டு. இவை வைத்தியத்திற்கு உதவும். பழத்தைப் பிட்டுப் பார்த்தால் உள்ளே சிறு சிறு விதைகளும் மயிரைப் போன்ற காம்புகளும் நிறைய இருக்கும் புழுக்களையும் காணலாம். இதைச் செடியாகவும், மரமாகவும் தென்னிந்தியாவில் எங்கும் பார்க்கலாம். சாதாரணமாய் ஆற்றோரங்களில் மிகுதியாக விளையும். அடியில் கண்டபடி இது அனேக விதங்களாயினும், சீமையத்தியென வழங்கும் தேன் அத்திதான் மிகவும் அபூர்வமானது. அது நீலகிரி, பெங்களூர், காபூல், காஷ்மீரம் முதலிய இடங்களிலுள்ள மலைச்சாரல்களில் பயிராகும். அதைச் சாப்பிட இரத்த விருத்தியுண்டாகி மலபந்தம் போகும்.
b. Country fig tree-Ficus glomerata alias. F. Racemosa. It is a big tree, 30-40 feet high with a trunk crooked and bark of a rusty greenish colour and rough. Leaves are alternate and smooth on both sides, tapering equally to each end. Fruits with soft coat and they are orange-coloured when ripe. The flowers are usually incomplete and unlike other trees make no outward appearance, but are concealed within the fig. On account of its rarity, the name is proverbially used in conversation to indicate a rare appearance as, “அத்தி பூத்ததுபோல்” (like fig tree yielding flowers). From the stem is collected a milky juice and from the root is tapped a fluid called ‘padhini’ and they are both found useful in medicine. The Fruits of this tree, when opened, are found to contain innumerable small seeds and hair.